நான் ஜனாதிபதியானால் வருமான வரியை ஒழிப்பேன்., அமெரிக்கர்கள் மீது டிரம்ப் வாக்குறுதி மழை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் மக்கள் மீது வாக்குறுதிகளை பொழிந்து வருகிறார்.
இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்கர்களை வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கார்ப்பரேட் வரி விகிதத்தை 35% இலிருந்து 21% ஆகக் குறைக்கவுள்ளதாகவும் மற்றும் அடுத்த ஆண்டு காலாவதியாகும் பல வரிச் சலுகைகளை நிரந்தரமாக அமுல்படுத்தவுள்ளதாகவும் கூறுகிறார்.
வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் ஹில் கிளப்பில் வியாழன் அன்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் நடத்திய கூட்டத்தில் இந்தக் கொள்கை முன்வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி வகித்த போது, வெளியுறவுக் கொள்கையில் பன்முக ஆயுதமாக கட்டணங்கள் பயன்படுத்தப்பட்டது.
ட்ரம்பின் சமீபத்திய முன்மொழிவு, ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடனுக்கு எதிராக அவர் வெற்றி பெற்றால், அவர் இன்னும் கூடுதலான பாதுகாப்புவாத வர்த்தக நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது.
ஆனால் இந்த திட்டத்திற்கு பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.
வருமான வரிக்கு பதிலாக கட்டணங்கள் விதிக்கப்படுவது குறைந்த மற்றும் நடுத்தர வர்க்க அமெரிக்கர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் பணக்காரர்களுக்கு பயனளிக்கும் என கூறப்படுகிறது.