லண்டனில் இந்திய சிறுமி மாயம்., தேடும் பணிகள் தீவிரம்
பிரித்தானியாவில் கிழக்கு லண்டன் அருகே 15 வயது இந்திய சிறுமி காணாமல் போனார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் எசெக்ஸ் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிஸார் விசாரணையை தொடங்கினர். சிறுமியை கண்டுபிடிக்க புகைப்படங்களுடன் பொலிஸார் பரவலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
Essex, Benfleet பகுதியில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளில் ஒருவரான அனிதா கோசி (Anita Kosi) 10-ஆம் வகுப்பு படிக்கிறார்.
இந்தக் குடும்பம் இந்தியாவின் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவிற்கு வந்தனர்.
அனிதாவை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர் ரயிலில் லண்டன் திரும்பியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரை தேடி வருவதாக எசெக்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் 5 அடி 4 அங்குல உயரம், நீண்ட கறுப்பு முடி மற்றும் கண்ணாடியுடன் காணப்படுவார் என எசெக்ஸ் பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் காணாமல் போனபோது வெள்ளை மேலாடை, கருப்பு கால்சட்டை மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை நிற காலணிகளை அணிந்திருந்தார். அவர் ஒரு கைப்பையையும், ஆரஞ்சு நிற கைப்பிடிகள் கொண்ட சாம்பல் நிற தோல் துணி பையையும் எடுத்துச் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனிதா வெள்ளிக்கிழமை மதியம் ரயிலில் லண்டனுக்குப் பயணம் செய்திருக்கலாம் என்று எசெக்ஸ் காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனிதாவைக் கண்டுபிடிக்கும் எவரும் எசெக்ஸ் காவல் நிலையத்தின் 999 என்ற எண்ணை அழைத்து, சம்பவம் 852ஐக் குறிப்பிடவும். +447913634209 மற்றும் +447886396579 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.