21 கோடி கரெண்ட் பில் – ஷாக் ஆன வீட்டு உரிமையாளர்
21 கோடி மின் கட்டணம் வந்ததை அறிந்த வீடு உரிமையாளர் அதிச்சியில் மூழ்கியுள்ளார்.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், கானாபுராவைச் சேர்ந்தவர் வேமரெட்டி. இங்கு பல காலமாக வசித்து வரும் இவர் மாத மாதம் சரியாக மின் கட்டணம் செலுத்தி விடுவார். இவரது வீட்டுக்கு கடந்த ஜூன் 5 ம் தேதி மின் கட்டண பில்லை பார்த்த வேமரெட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏனெனில் , 01-01-1970 முதல் 05-06-2024 வரை 297 யூனிட்கள் பயன்படுத்தியதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.21,47,48,569 பில் வந்துள்ளது. இந்த பில்லை பார்த்த அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மின்வாரியம்
இதனையடுத்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார் வேமரெட்டி. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டணம் அதிகமாக இருந்தது உண்மை என்றும், நுகர்வோர்கள் அளித்த புகாரின் பேரில் பிரச்னையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் வட்டார மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது போல கடந்த காலங்களில் பலருக்கும் லட்சத்திலும், கோடிகளிலும் தவறான மின் கட்டணம் வந்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.