;
Athirady Tamil News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்

0

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தறை பிரதேசத்தில் நிறுவனமொன்றை நிறுவி மோசடியான முறையில் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 130 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

குவியும் முறைப்பாடுகள்

இதனடிப்படையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த நிறுவனம் வேலைவாய்ப்பு பணியகத்தில் முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், அதன் வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் பெப்ரவரி 29ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை தலா 5 இலட்சம் ரூபா 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.