வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி… 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்றையதினம் (160=-06-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.