;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகுமாறு ராஜிதவிடம் கோரிய ரணில்

0

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு எனக்குக் கிடைத்த வாய்ப்பையே மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்
மேலும் தெரிவிக்கையில், ”2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு ரணில் விக்ரமசிங்க என்னிடம் கோரினார். இதற்குரிய வாய்ப்பு எனக்கே வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நான் அவரிடம் இதற்காக 24 மணிநேரம் அவகாசம் கோரினேன். அதன்பின்னர் சந்தித்தேன். தேர்தலில் வெற்றி பெற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் அவசியம் எனவே, மைத்திரியைக் களமிறக்குமாறு கோரினேன்.

எந்த மைத்திரி என அவர் என்னிடம் கேட்டார், நான் மைத்திரிபால சிறிசேன என்றேன்.

அவரை நம்ப முடியுமா என ரணில் என்னிடம் கேட்டார். நான் ஆம் நிச்சயம் என பதிலளித்தேன். ஆனால், மைத்திரி நம்ப முடியாத நபர் என்பது இன்று தெரிந்துவிட்டது என்று ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.