மேல் மாகாணத்தில் அதிகரித்த டெங்கு நோய்: சுகாதார அமைச்சு தகவல்
இலங்கையில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் மாத்திரம் 9,675 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்
இதேவேளை டெங்கு நோயினால் இவ்வருடம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மழையுடன் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளதால், வீடுகளைச் சுற்றி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.