ஜப்பானில் பரவும் உயிரை கொல்லும் அரிய நோய்: எச்சரித்துள்ள சுகாதாரதுறை
48 மணி நேரத்திற்குள் கடுமையான நோய் மற்றும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் அரிய ‘சதை உண்ணும் பாக்டீரியா’ ஜப்பானில்(Japan) பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் நாட்டில் Streptococcal என்ற பாக்டீரியா பரவல் அதிகரித்துள்ளதுடன் ஜூன் 2ஆம் திகதிக்குள் 977 பேர் இந் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு மொத்தம் 941 பேர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரிய நோய்
ஜப்பானை தாக்கிய இந்நோய், கடந்த சில நாட்களாக அதிகமாக பரவி வருவதாக தெரியவருகின்றது.
தற்போதைய நோய்த்தொற்று விகிதம் தொடர்ந்தால், ஜப்பானில் அதிகமானோர் இதனால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இந்த நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் 30% என்ற அபாயகரமான அளவில் உள்ளது.
வயதானவர்கள், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனரை் என்பது குறிப்பிடத்தக்கது.