ரஷ்ய சிறை அதிகாரிகளை பிணைக்கைதிகளாக பிடித்த ISIS பயங்கரவாதிகள்
ரஷ்யாவில் உள்ள சிறைச்சாலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள், இரண்டு சிறை அதிகாரிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள்
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ளது ரோஸ்டோவ் பகுதி. இங்குள்ள சிறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆறு பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.
2023ஆம் ஆண்டில் தெற்கு ரஷ்யாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மீது திட்டமிட்ட தாக்குதலில் ஈடுபட்டதற்காக, அவர்களுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சந்தேகத்திற்கிடமான ஐ.எஸ்.ஐ.எஸ் கைதிகள், ரஷ்ய தடுப்பு மையத்தில் உள்ள அறையில் இருந்து வெளியேறி, இரண்டு சிறை அதிகாரிகளை கடத்திச் சென்று கத்தி முனையில் பிணைக் கைதிகளாக வைத்தனர்.
துப்பாக்கிகளை கோருகின்றனர்
அவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்த தகவல் சிறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த ஐ.எஸ்.ஐ.எஸ் கைதிகள் கார் மற்றும் துப்பாக்கிகளை கோருகின்றனர். பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அவர்கள், ஏற்கனவே தண்டனை பெற்றவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்.
சிறையின் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ள அறையை அவர்கள் அணுக முயன்றனர் எனவும் தெரிய வந்துள்ளது.