சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த கிறிக்கெட் சுற்றுப்போட்டி
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்தமாக வருடா வருடம் நடைபெறும் கிறிக்கெட் சுற்றுப்போட்டி இவ்வருடமும் மருதமுனை மசூர் மெளலான விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
சனிக்கிழமை(15) நடைபெற்ற இறுதிப்போட்டியில் மருதமுனை யுனிவேர்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து மருதமுனை பென்ஸீன் விளையாட்டு கழகம் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியது.
மர்ஹூம் எச் எல் ஜமால்தீன் எஸ் எஸ் பி பவுண்டேசனின் தலைவர் எச் எல் நஜிமுத்தீன் அவர்களின் தலைமையிலும் மருதமுனை கிறிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் யூ எஸ் சமீம் ஆசிரியர் அவர்களின் இணை தலைமையிலும் நடைபெற்ற இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே எம் ஜவாத் அவர்களும் கெளரவ அதிதியாக மையோன் குறூப் நிறைவேற்று பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபாவும் விசேட அதிதிகளாக கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வை கே றஹ்மான் மற்றும் சிரேஷ்ட திடீர் மரண விசாரனை அதிகாரிகளான எம் ஐ நஸ்றுல் இஸ்லாம் மற்றும் ஏ எச் அல் ஜவாஹிர், டைடம் நிறுவன பணிப்பாளர் நஸ்மி மீரா முஹைதீன், கணிய அளவையாளர் வஸீம் சஜாத் மற்றும் தேசிய புத்தாக்க நிறுவனத்தின் உதவி பணிப்பாளக் நுஸைக் முப்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
போட்டிகள் மற்றும் இறுதி நாள் நிகழ்வை அமைப்பின் செயலாளர் யூ எஸ் சபீல் மற்றும் அமைப்பின் பொருளாளர் ஏ எம் எம் றஜி ஆகியோர் நெறிப்படுத்தி இருந்தனர்.