புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.(video)
ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின் இரு வேறு இடங்களில் சர்வதேச பிறை அடிப்படையில் நேற்று (16) சிறப்பாக நடைபெற்றது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மக்களுக்கான பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் அக்கரைப்பற்று மைதானத்தில் நடைபெற்றது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
இப்பெருநாள் தினமானது இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
வசதிபடைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவார்கள்.
உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்ககானவர்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.