;
Athirady Tamil News

யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது

0

வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் தெரிவித்த கருத்தை கோடிட்டுக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ் மாவட்டத்தில் சீனர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

நல்லாட்சியில் கடலட்டை குஞ்சு உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட சீன நிறுவனமும், தற்போதை நல்லாட்சி காலத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நூறு வீதம் யாழ் மாவட்டத்தினை சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்பான பொருளாதார நன்மைகளை வழங்கிவரும் கடலட்டை உற்பத்திகளை மேலும் விரிவாக்கம் செய்து முன்கொண்டு செல்வதற்கு, பண்ணையாளர்கள் நடைமுறை ரீதியாக உணர்ந்து கொண்ட சவால்களுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

பொய்களுக்கு மக்கள் இடங்கொடுக்காது வெளிப்படையான உண்மைகளை இனங்கண்டு எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அவசியமானதுமாகும்.

எமது மக்களே எமது பிரதேசங்களின் வளங்களை பயன்படுத்தி உச்ச பயன்களை பெறவேண்டும். அதுவே எனது எதிர்பார்ப்பாகும் என மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுதாகரன், நெக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ், வேலணை பிரதேச செயலர் சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.