ஹஜ் யாத்திரை சென்ற 19 இஸ்லாமியர்கள் சவுதியில் மரணம் – வெளியான அதிர்ச்சி காரணம்!
சவூதி அரேபியாவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட பல யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள்
இஸ்லாமியர்களின் முக்கிய 5 கடமைகளில் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள புனிதாக மெக்காவிற்கு யாத்திரை மேற்கொள்வது ஆகும்.
இந்த யாத்திரையானது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான முஸ்லிம் மக்களால் நிகழ்கிறது.
இவ்வருடத்திறாக யாத்திரையில் உலகெங்கிலும் இருந்து சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் யாத்திரை மேற்கொண்ட 19 இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியான அதிர்ச்சி காரணம்
சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர் மற்றும் ஈரானைச் சேர்ந்த 5 என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது.
யாத்திரை மேற்கொண்டுள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஜோர்டானின் தூதர் சுஃபியான் குடா, இறந்தவர்களை அடக்கம் செய்ய, குடும்பத்தாரிடம் உடல்களை எடுத்துச் செல்ல சவுதி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
காணாமல் போன யாத்ரீகர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் சவுதி அரேபியாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மிகக் கவனத்துடன் இருக்க யாத்ரீகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.