;
Athirady Tamil News

UPSC முதன்மை தேர்வில் 200க்கு 170 மதிப்பெண்கள் எடுத்த AI செயலி!

0

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயலியான PadhAI, UPSC முதன்மை தேர்வு 2024 -ல் 200க்கு 170 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வானது காலை மற்றும் மாலை என்று இரு தாள்களாக நடத்தப்பட்டது.

இதையடுத்து, தேர்வு முடிந்த நிலையில் அதனுடைய வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகியது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளின் விடைகளை PadhaiAI எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செயலி 7 நிமிடத்தில் கண்டுபிடித்து தெரிவித்தது.

அதோடு, 200க்கு 170 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கடந்த ஜூன் 16 -ம் திகதி இந்திய தலைநகரான டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் PadhAI செயலியின் செயல்பாடு குறித்த Live demoதி நடத்தப்பட்டது.

இதில், கல்வி துறை, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த செயலியில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், அதற்கான விடைகளை AI செயலி கண்டுபிடித்தது.

இந்த விடைகளை UPSC பயிற்சி அளித்து வரும் நிறுவனங்கள், Microsoft, Google மற்றும் Open AI போன்ற நிறுவனங்களின் ஏஐ மாடல் அளித்த விடைகளுடன் ஒப்பிட்டும் பார்த்தன.

இந்த PadhAI செயலியானது UPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ஐஐடி கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.