;
Athirady Tamil News

மேற்கு வங்க ரயில் விபத்து; 15 பேர் உயிரிழப்பு- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

0

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

ரயில் விபத்து
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சரக்கு ரயில், சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த போது சரக்கு ரயில் மோதிஉள்ளது. தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ரயில் விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டன. சரக்கு ரயில் மோதியதில், பயணிகள் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணம்
இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், “மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார். அதே சமயம் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், கடுமையான படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் சிறிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.