;
Athirady Tamil News

விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்..இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த நபர்!

0

விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம் மீது நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம்
இங்கிலாந்தை சேர்ந்தவர் ரிச்சர்ட். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபரான இவர், தான் பயன்படுத்தும் ஐஃபோன் வழியாக சில பாலியல் தொழிலாளர்களுக்குக் மெசேஜ் அனுப்பி, தொடர்ந்து சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

அவ்வப்போது அவர் அனுப்பும் மெசேஜ்களை கைப்பேசியிலிருந்து நீக்கி வந்துள்ளார்.ஆனால், அவரது ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த மெசேஜ்கள் அப்படியே நீக்கப்படாமல் இருந்துள்ளது. அந்த ஐமேக் மடிக்கணினி குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பயன்படுத்துவதுண்டு.

அப்படி ஒரு நாள் அந்த ஐமேக்கில் செயலி ஒன்றை கவனித்த ரிச்சர்ட் மனைவி, தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்கு மெசேஜ் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.

இழப்பீடு வழக்கு
அவர் மேலும் ஆழமாக ஆராய்ந்ததில் பல ஆண்டுகளாகத் தம் கணவர் அனுப்பி, பின்னர் நீக்கிய குறுந்தகவல்கள் அனைத்தையும் பார்த்து அதிர்ந்துவிட்டார்.

இதனால் கடும் மனா உளைச்சலுக்கு ஆளான ரிச்சர்ட் மனைவி விவாகரத்து கோரினார்.இந்த நிலையில், அந்த தொழிலதிபர் கணவர் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். அதாவது, ஒரு ஐஃபோனிலிருந்து நீக்கப்படும் குறுந்தகவல்கள்,

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை நிறுவனம் தன் வாடிக்கையாளவாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்பதே அவரது வாதமாக முன்வைத்துள்ளார்.எனவே தனது விவாகரத்துக்கு காரணமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனமிடம் சுமார் 5 மில்லியன் பவுண்ட் (ரூ. 53 கோடி) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.