;
Athirady Tamil News

சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள ஒரு தகவல்

0

சுவிட்சர்லாந்தின் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்குக் கூட, சுவிஸ் குடியுரிமை பெறுவது குறித்த நடைமுறைகள் முழுமையாக தெரியுமா என்பது கேள்விக்குறிதான்.

ஆகவே, சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு மிகவும் பயனுள்ளது என கருதப்படும் சில தகவல்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோருக்கு மிகவும் உதவக்கூடிய ஒரு அமைப்பு, State Secretariat for Migration (SEM) என்னும் புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகமாகும்.

அது மட்டுமின்றி, சுவிட்சர்லாந்தில் பணி அனுமதி, விசா பெறுதல் மற்றும் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய என்னென்ன தேவை என்பது குறித்த விடயங்களை அறிந்துகொள்வதற்கும், பல்வேறு நாட்டவர்களுக்கும், இந்த அரசு அமைப்பு உதவியாக இருக்கும்.

சுவிஸ் குடியுரிமை பெறுவதில் உதவியாக இருக்கும் இணையதளங்கள்
Ch.ch என்னும் இந்த இணையதளம், பெடரல் மற்றும் மாகாண அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. ஆகவே, அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் நம்பத்தக்கவையாக இருக்கும்.

உங்கள் நாட்டிலுள்ள சுவிஸ் தூதரகம்
உங்கள் நாட்டிலுள்ள சுவிஸ் தூதரகம், உங்கள் நாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகளைக் குறித்து நன்கறிந்ததாக இருக்கும் என்பதால், அதனால் உங்களுக்கு ஏற்ற, பயனுள்ள தகவல்களை சிறப்பாக உங்களுக்கு அளிக்க முடியும்.

இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விடயம் எனவென்றால், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான பெடரல் நடைமுறைகள் ஒரேமாதிரியானவைதான் என்றாலும், மாகாணத்துக்கு மாகாணம் சில விதிகள் மாறுபடும்.

ஆகவே, மாகாண இணையதளங்களையும் பார்வையிடுவது சுவிஸ் குடியுரிமை பெறுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.