;
Athirady Tamil News

தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்புக்கு வழங்கும் பெட்டிகளா தீர்மானிக்கிறது ?

0

தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட பெட்டிகள் தான் தீர்மானித்ததா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதி உச்சமாக அளவில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்டசியின் சிரேஸ்ட தலைவருமான இரா சம்பந்தன் கூறியுள்ளார்.

ஆனால் இக்கோரிக்கையை கடந்த 2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என்ற கேள்வி தமிழ் மக்களிடையே இன்று எழுகின்றது.

இதேநேரம் முன்னாள் சுகாதார அமைச்சர் இராஜித சேனாரத்ன கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கோரியதாக தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கூற்றை கூட்டமைப்பினர் எவரும் மறுத்திருக்கவும் இல்லை

அத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட பெட்டிகள் தான் தீர்மானித்ததா? என்கின்ற கேள்வியும் எழாமலில்லை.

இதேவேளை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக அண்மையில் தமிழிரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், துரோகி என பட்டம் சூட்டுவார்கள் என்று அஞ்சி உண்மையை மறைக்கமாட்டேன் எனவும் பொது வேட்பாளர் என்பது ஒரு விசப்பரிட்சை எனவும் கூறியிருந்தார்.

ஆனால் வவுனியாவில் அவர்களது கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இதுபற்றி முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது

அதேநேரம் தமிழ் பொது வேட்பாளராக வடக்கு மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் மற்றொரு முன்னாள் உறுப்பினரும் களமிறக்க தயாரென அறிக்கை விட்டுள்ளனர்.

இவர்களை தமிழ் மக்கள் கணக்கில் எடுக்கப்போவதில்லை. அதேநேரம் இவர்களது பின்னணிகள் எதுவாக இருந்தன என்பதை கடந்தகால பதிவுகள் இதற்கு சான்றாகவும் உள்ளன.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவது போன்று பொய்களுக்கு மக்கள் இடங்கொடுக்காது வெளிப்படையான உண்மைகளை இனங்கண்டு எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும்.

அதுவே தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அவசியமானதுமாகும்.
ஆகவே இவர்களுடைய பொது வேட்பாளர் என்ற விடயமோ அல்லது சம்பந்தனுடைய திடீர் கரிசனையையோ மக்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.