;
Athirady Tamil News

இலங்கையில் கடன் அட்டை பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

இலங்கையில் கடன் அட்டை பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில் 1,911,616 ஆக இருந்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை, கடந்த ஏப்ரலில் 1,914,125 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடன் அட்டை

உள்நாட்டில் மட்டும் பணம் செலுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட 10,391 கடன் அட்டைகளும் சர்வதேச ரீதியான பாவனைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட 1,903,735 கடன் அட்டைகளும் இதில் அடங்கும்.

கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், கடன் அட்டைகளின் மொத்த நிலுவைத் தொகை 151,580 மில்லியன் ரூபா என மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.