பிரான்ஸ் தேர்தல் பிரச்சாரம் துவங்கியதுமே மேக்ரான் கட்சிக்கு கிடைத்துள்ள அடி
பிரான்சில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். தேர்தல் பிரச்சாரங்களும் துவங்கிவிட்டன. ஆனால், ஆரம்பமே மேக்ரானுக்கு அடியாக அமைந்துள்ளது!
மேக்ரான் கட்சிக்கு கிடைத்துள்ள அடி
பிரான்சில் நேற்று தேர்தல் பிரச்சாரங்கள் முறைப்படி துவங்கியுள்ளன. அதைத் தொடர்ந்து, கருத்துக்கணிப்புகளும் துவங்கிவிட்டன. ஆனால், அவை மேக்ரானுக்கு மோசமான செய்தியைத் தெரிவித்துள்ளன.
ஆம், கருத்துக்கணிப்புகளில், தேர்தலில் Marine Le Penஇன் National Rally (RN) கட்சி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, இரண்டாவது இடத்தை பிரான்சின் இடதுசாரிக் கட்சிகள் பிடிக்கும் என்றும், மேக்ரான் கட்சிக்கோ, மூன்றாவது இடமே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான National Rally (RN) கட்சிக்கு 33 சதவிகிதம் வாக்குகளும், கூட்டணிக்கட்சிகளின் வாக்குகளும் இணைந்தால் 37 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், இடதுசாரிக் கட்சிகளுக்கு 28 சதவிகித வாக்குகளும், மேக்ரான் கட்சிக்கோ, 18 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன.