பிரேக் போட்டு ரயிலை நிறுத்திய ஓட்டுநர்.., 10 சிங்கங்களின் உயிரை காப்பாற்றிய மனிதநேயம்
சரக்கு ரயில் ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை நிறுத்தியதால் 10 சிங்கங்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
ரயில் ஓட்டுநரின் மனிதநேயம்
இந்திய மாநிலமான குஜராத்தில் சரக்கு ரயில் ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை நிறுத்தியதால் 10 சிங்கங்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
அம்ரேலி மாவட்டம் பிபாவாவ் துறைமுகம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 10 சிங்கங்கள் இருந்ததை பார்த்த ரயில் ஒட்டுநர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து ரயில்வேயின் பாவ்நகர் பிரிவு வெளியிட்ட செய்தி குறிப்பில், “பிபாவாவ் துறைமுக நிலையத்தில் இருந்து முகேஷ் குமார் மீனா என்பவர் சரக்கு ரயிலை இயக்கி வந்துள்ளார். இவர், தண்டவாளத்தில் 10 சிங்கங்கள் இருந்ததை பார்த்ததும் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார்.
பின்னர், சிங்கங்கள் எழுந்து தண்டவாளத்தை விட்டு நகரும் வரை காத்திருந்த பின்னர் தான் ரயிலை இயக்கினார். இவரின் செயலானது அதிகாரிகளால் பாராட்டப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு பவானிசாகர் ரயில்வே பிரிவு சார்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு, ரயில் ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புக்கு ஏற்ப ரயில்களை இயக்குகின்றனர் என்றும் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபாவாவ் துறைமுகத்தை வடக்கு குஜராத்தை இணைக்கும் இந்த ரயில் பாதையில் கடந்த சில ஆண்டுகளில் சிங்கங்கள் இருந்துள்ளது.