;
Athirady Tamil News

டிரம்புக்கு எதிராக விளம்பர பிரசாரம்: பாரிய தொகை செலவு

0

அமெரிக்க (America) முன்னாள் அதிபர் டிரம்புக்கு ( Donal Trump) எதிராக விளம்பர பிரசாரங்களை அதிபர் பைடன் (Joe Biden) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், அதிபர் பைடனின் தேர்தல் குழுவானது 50மில்லியன் டொலரை (ரூ.417கோடி) டிரம்புக்கு எதிரான விளம்பர பிரசாரத்துக்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இதே போன்று ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் மீண்டும் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

நிதி மோசடி
அந்த வகையில், இருவருக்கும் வருகிற 27-ம் திகதி நேருக்கு நேர் விவாதம் நடைபெற உள்ளதாகவும் இந்த விவாதத்துக்கு முன்பாக முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு எதிரான விளம்பர பிரசாரத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், வழக்குகளில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, தவறான முறையில் கொடுமை மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டது என அனைத்தும் அமெரிக்காவின் அனைத்து மக்களிடமும் சென்றடையும் வகையில் தொலைக்காட்சிகள், கையடக்க தொலைபேசிகள் தேசிய மற்றும் அனைத்து விதமான ஒளிபரப்பு சாதனங்கள் மூலமாக விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.