செங்கடலில் முற்றாக மூழ்கியது சரக்கு கப்பல்: ஹவுதி தாக்குதலால் ஏற்பட்ட விளைவு
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கிரீஸ் (Greece) நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் முழுமையாக கடலில் முழ்கியது.
இஸ்ரேலுக்கு (Israel) எதிரான போரில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தாக்குதல்
அந்த வகையில், கடந்த 12 ஆம் திகதி ஏடன் வளைகுடாவில் செங்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த கிரீஸ் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
குறித்த கப்பலை வெடிபொருட்களை ஏற்றிவந்த தானியங்கி படகுகளை மோத செய்து தாக்குதல்களை நடத்தினர்.
கிரீஸ் நாட்டு கப்பல்
அந்த தாக்குதலால் சரக்கு கப்பல் முற்றாக பற்றி எரிந்ததுடன், கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதேவேளை, தாக்குதலில் ஒரே ஒரு மாலுமி கடலில் மூழ்கி உயிழந்ததையடுத்து கப்பல் நடுக்கடலில் கைவிடப்பட்டது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலால் கைவிடப்பட்ட கிரீஸ் நாட்டு கப்பல், கடந்த ஒரு வாரமாக மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது முற்றாக கடலில் மூழ்கியுள்ளது.