லண்டனில் பிரதான பாலம் ஒன்று மறு அறிவிப்பு வரும் வரை பூட்டு: வெளியான காரணம்
லண்டன் (London) நகரில் பிரதான பாலம் ஒன்று ஐந்து மணிநேரம் மூடப்பட்டதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சைக்கிள் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதாலேயே பிரதான பாலமான செல்சியாஸின்(Chelsea Bridge) வடக்குப் பகுதி மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவமானது நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் லண்டன் நோயாளர் காவு வண்டி சேவை குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடந்தி வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செல்சியா பாலம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.