;
Athirady Tamil News

ஈரானின் IRGC படைக்கு தடை! கனடா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

0

ஈரானின் IRGC-யை தீவிரவாத அமைப்பாக கனடா அரசு அறிவித்து இருப்பது உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

கனடாவின் முடிவு
ஈரானின் IRGC இராணுவ படையை தீவிரவாத அமைப்பாக கனடா அறிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஈரான் நாட்டை விட்டு வெளியேறியோரிடமிருந்து வந்த அழுத்தங்களுக்கு பிறகு, கனடா இறுதியாக IRGC-யை ஒரு தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உலகளாவிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கனடாவின் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

மேலும், இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான ஈரானிய அதிகாரிகள், உயர் ஐ.ஆர்.ஜி.சி. உறுப்பினர்கள் உட்பட பலர் கனடாவுக்குள் நுழைய தடை செய்யப்படுவார்கள்.

IRGC இராணுவ படையின் பின்னணி
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) என்பது ஈரானில் ஒரு சக்திவாய்ந்த ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பாகும்.

இது உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது மற்றும் சுமார் 190,000 க்கும் மேற்பட்ட செயல்படக்கூடிய பணியாளர்களை கொண்டுள்ளது.

இவர்கள் ஈரானின் மூலோபாய ஆயுத திட்டத்தை கண்காணிக்கும் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையை கொண்டுள்ளனர்.

ஐ.ஆர்.ஜி.சி. மத்திய கிழக்கில் தனது ரகசிய நடவடிக்கைப் பிரிவான குத்ஸ் படையின்(Quds Force) மூலம் செல்வாக்கு செலுத்துகிறது.

எனவே குத்ஸ் படை ஏற்கனவே கனடாவால் தீவிரவாதக் குழுவாக பட்டியலிடப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.