பிரித்தானியாவில் கோடை விழாவில் நடந்த பயங்கரம்: 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!
கோடை விழாவில் 17 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு 17 வயது இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்
பிரித்தானியாவில் மகிழ்ச்சியான கோடை விழா ஒன்று கொடூரமான வன்முறையால் கலங்கமடைந்தது.
கோடை விழாவில் கலந்து கொண்ட சார்லி காஸர்(Charlie Cosser) என்ற 17 வயது சிறுவன் கத்தி குத்துக்கு இறையாகி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இதற்குக் காரணமான யுரா வேர்யப்ருஸ்(Yura Varybrus) என்ற இன்னொரு 17 வயது சிறுவனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
துன்பமாக மாறிய விழா
இந்த சம்பவம் 2023 ஜூலை 23 ஆம் திகதி மேற்கு சசெக்ஸில் நடந்த ஒரு தனிப்பட்ட விழாவில் நடந்தது.
நடனத் தளத்தில் ஏற்பட்ட சண்டையில் வேர்யப்ருஸ் சார்லியை மார்பில் மூன்று முறை கத்தியால் குத்தினார்.
சார்லி காஸரை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரண்டு நாட்கள் கழித்து தனது காயங்கள் காரணமாக சார்லி பலியானார்.
இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மற்றொரு 17 வயது சிறுவன் யுரா வேர்யப்ருஸ்-க்கு குறைந்த பட்சம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.