;
Athirady Tamil News

அம்பாறையில் வரவேற்பு கோபுரம் அமைப்பு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

அம்பாறை(Ampara) மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையின் நுழைவாயிலில் வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்றில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி வீரமுனை நுழைவாயிலில் வரவேற்பு கோபுரம் அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றினை சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.

இன முரண்பாடு
வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதான நிகழ்வானது இன முரண்பாட்டை, இன வன்முறையினை ஏற்படுத்தும் என சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது நேற்று(19.06.2024) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதுடன் அவர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது இரு சாராரின் சமர்ப்பணங்களையும் செவிமடுத்த நீதிவான் குறித்த வழக்கினை கட்டளைக்காக எதிர்வரும் 27ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.

இனமுரண்பாடுகள் ஏற்படும் இனக்கலவரம் ஏற்படும் என்ற வகையில் தடையுத்தரவினை பொலிஸார் கோரியிருந்தபோதிலும் அவ்வாறு ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகிக்கப்படும் நபர்களை கைதுசெய்யாது இவ்வாறான கட்டளைகளை பெற்றிருப்பதானது அடிப்படையற்றது என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.