;
Athirady Tamil News

யாழில் விபத்து – 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.

ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை வீதியில் வேகமாக பயணித்த ஹயஸ் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.