உக்ரைனுக்கு நன்கொடை… தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளும் பெண்
ரஷ்யாவில் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு பயணப்பட்ட ரஷ்ய அமெரிக்க பெண் ஒருவர் கைதாகி தற்போது தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார்.
உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக
பணம் திரட்டி உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். ரஷ்யாவில் பிறந்தவர் Karelina.
ஆனால் புதிய வாழ்க்கையை கட்டமைக்கும் பொருட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ள அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்பா ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே தேசத்துரோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தற்போது 12 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையை எதிர்கொண்டு வருகிறார். தேசத்துரோக வழக்கு என்பதால், மூடப்பட்ட அறைக்குள் விசாரணை முன்னெடுக்கப்படும்.
இந்த நிலையில், ஆகஸ்டு 7ம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Karelina தமது குடும்பத்தினரை சந்திக்கும் பொருட்டு ஜனவரி மாதம் ரஷ்யாவுக்கு திரும்பிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசத்துரோக வழக்கு
திகைக்கவைக்கும் வகையில் அவரது காதலன் அனுப்பிய விமான டிக்கெட் காரணமாகவே Karelina ரஷ்யா திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா பாதுகாப்பானது, அச்சப்பட தேவையில்லை என்றும் அந்த நபர் Karelina-வை நம்ப வைத்துள்ளார்.
ஆனால் திட்டமிட்டு அவர் கைது செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் உக்ரைனுக்கு ஆதரவாக நியூயார்க் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அவர் நிதியுதவி அளித்துள்ளார் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, குறைந்தபட்சம் ஒரு டசின் அமெரிக்கர்கள் தற்போது ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.