கொழும்பை வந்தடைந்த ஜப்பான் போர்க்கப்பல்
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் நாசகாரி கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) சமிதாரே (DD – 106) என்ற இந்த கப்பல், நாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
இரண்டு நாட்களுக்கு இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
ஜப்பானிய கப்பல்
150.5 மீ நீளமுள்ள இந்த கப்பலில் 202 பணியாளர்கள் காணப்படுகின்றனர்.
இந்தநிலையில், குறித்த ஜப்பானிய கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, நாளை (ஜூன் 22) அன்று இலங்கைத் தீவை விட்டுப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கப்பல் கொழும்பு கடற்பகுதியில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடவுப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடும் என்றும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.