ரஷ்யா மென்பொருள் நிறுவனத்திற்கு அமெரிக்கா அதிரடி தடை
ரஷ்யா சைபர் செக்யூரிட்டி (Cyber security) நிறுவனமான கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் (America) விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமொண்டோ (Gina Raimondo) வெளியிட்டுள்ளார்.
மென்பொருள் துறையில் பிரபல நிறுவனம்
அவர் மேலும் தெரிவிக்கையில், ரஷ்யா (Russia) நிறுவனமான கேஸ்பர்ஸ்கை கொண்டு அமெரிக்காவின் மிக முக்கிய விபரங்களை சேகரிக்கும் பணிகளில் ரஷ்யா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக ஜினா ரைமொண்டோ குற்றஞ்சாட்டி உள்ளார்.
அமெரிக்கா மற்றும் அந்நாட்டு குடிமக்களுக்கு அவர்களது தொழில்நுட்பம் ஆபத்தை ஏற்படுத்தும் எனில் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனவே மென்பொருள் துறையில் பிரபலமாக அறியப்படும் கேஸ்பர்ஸ்கை நிறுவனம் ரஷ்யாவின் மாஸ்கோவை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது.
உலகம் முழுக்க 400 மில்லியன் பேரும், 200 க்கும் அதிக நாடுகளில் 2.7 லட்சம் கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.
இந்நிலையிலேயே, கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது,