வெப்ப அலையால் பல நாடுகள் தகிக்க… தீவு ஒன்றில் புரட்டியெடுத்த Rissaga சுனாமி
பிரித்தானியர்கள் அதிகம் விரும்பும் Majorca தீவில் திடீரென்று சுனாமி தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Rissaga எனப்படும் சுனாமி
கடல் மட்டம் திடீரென்று உயரவும் Majorca தீவின் வடகிழக்கு கடற்கரை பகுதியான Puerto Alcudia-வை சுனாமி புரட்டிப்போட்டுள்ளது. செவ்வாய்கிழமையில் இருந்தே ஸ்பெயின் Majorca தீவுக்கு ஆம்பர் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் Rissaga எனப்படும் சுனாமிக்கு 40 முதல் 70 சதவிகித வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 6 மணியில் இருந்து வியாழக்கிழமை பகல் 8 மணி வரையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
Rissaga சுனாமி என்பது இடியுடன் கூடிய மழை போன்ற வேகமாக நகரும் வானிலை நிகழ்வுகளால் விரைவான காற்று அழுத்த மாற்றங்களால் தூண்டப்பட்டு உருவாவதாகும்.
Majorca தீவில் ஏற்பட்ட சுனாமி என்பது புயல்களால் ஏற்பட்ட வளிமண்டல அழுத்தத்தின் மாறுபாடுகளால் ஏற்பட்டது என்றே ஸ்பெயின் வானிலை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து சிக்கல்
வெறும் 15 நிமிடங்களில் கடல்மட்டம் உயரவும், இறங்கவும் வாய்ப்புள்ளது என்றும், அதன் பின்னர் சாதாரண நிலைக்கு திரும்பும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்ட இந்த சுனாமியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
2018ல் இதுபோன்ற rissaga சுனாமி ஏற்பட்டதில், ஜேர்மானியர் ஒருவர் மரணமடைந்தார். மிக சமீபத்தில் தான் மஜோர்கா தீவு மழையால் பாதிக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்ததால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது.
ஓடுபாதைகள் நீருக்கடியில் மூழ்கிய நிலையில், பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.