மன்னர் சார்லஸ் கோபம்: இளவரசர் ஹரிக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: நல்லது நடக்கலாம்
மன்னர் சார்லஸ், பிரித்தானியாவில் ஒரு வீடு பார்க்கும்படி இளவரசர் ஹரிக்கு உத்தரவிட்டுள்ளார். தன் பேரப்பிள்ளைகளை நேரில் சந்திக்க இயலாததால் அவர் கோபமடைந்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரிக்கு மன்னர் பிறப்பித்துள்ள உத்தரவு
இளவரசர் ஹரியின் பிள்ளைகளான ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் நேரில் சந்திக்க முடியாததால் கோபமடைந்துள்ள மன்னர் சார்லஸ், தான் வாழும் ஹைக்ரோவ் (Highgrove) இல்லத்தின் அருகே வீடு ஒன்றை பார்க்குமாறு ஹரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
அப்படி ஹரி தன் வீட்டினருகே ஒரு வீட்டைப் பார்த்தால், வார இறுதி நாட்களில் இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகள் தாத்தா பாட்டியைப் பார்க்க ஹைக்ரோவ் இல்லத்துக்கு வரும்போது ஹரியும் தன் பிள்ளைகளை அங்கு அழைத்துவரலாம், பிள்ளைகள் தன்னுடன் ஒன்றாக நேரம் செலவிடலாம் என மன்னர் திட்டமிட்டுள்ளதாக ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn தெரிவித்துள்ளார்.
நல்லது நடக்கலாம்…
இன்னொரு விடயம் என்னவென்றால், தனக்கு புற்றுநோய் பாதித்துள்ள நிலையில், தன் பிள்ளைகளான வில்லியமும் ஹரியும் ஒன்று சேரவேண்டுமென அவர் ஆசைப்படுகிறார்.
ஆக, ஹரி பிரித்தானியாவில் வீடு பார்த்து, தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவ்வப்போது சார்லஸ் வீட்டுக்கு வரும்போது, ஹரியும் வில்லியமும் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு ஒன்றிணையக்கூடும், அல்லது தந்தை கொடுக்கும் அழுத்தம் காரணமாகவாவது அவர்கள் ஒன்றிணையக்கூடும் என்கிறார் Tom Quinn.
என்ன நடந்தாலும், இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான மேகன் பிரித்தானியாவுக்கு வரவேண்டும் என்று யாரும் விரும்பவில்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!