உலகிலேயே மிக நீளமான நேரான சாலை இதுதான்!
265 கிலோ மீற்றர் தூரம் கொண்ட நேரான உலகின் மிக நீளமான சாலை சவுதி அரேபியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஐர் நெடுஞ்சாலை எனும் நீண்ட சாலை அவுஸ்திரேலியாவில் உள்ளது. இதன் நீளம் 146 கிலோ மீற்றர் ஆகும். மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவை இணைக்கும் இந்த சாலைதான் உலகின் மிகவும் நேரான சாலை எனும் பெயர் பெற்றிருந்தது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் 265 கிலோ மீற்றர் தூரம் கொண்ட நேரான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை இருப்பு வைத்திருக்கும் ஹராத் நகரில் இருந்து, ஐக்கிய அரபு நாடுகளின் எல்லைக்கு அருகில் உள்ள அல்ஃபத்தா வரை இந்த சாலை நீண்டுள்ளது.
எங்குமே வளைவுகளோ அல்லது ஏற்ற இறக்கங்களோ இல்லாத இந்த நெடுஞ்சாலை, உலகின் மிகவும் நேரான நீண்ட சாலை எனும் பெயரை பெற்றுள்ளது.
இந்த சாலையை கடக்க 2 மணிநேரம் ஆகும். எனினும் விபத்துகள் சாதாரணமானவை என்பதால் கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவித்தல்களை சவுதி அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.