;
Athirady Tamil News

யாழ் போதனா வைத்தியசாலையில் நகைகள் பணத்தை அபகரித்தவர் சிசிடிவி மூலம் அடையாளம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரிடம் சகஜமாக கதைத்து அவருடைய மோதிரம் சிறுதொகைப்பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற நபர் கண்காணிப்பு கமராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர், குறித்த நபர் தொடர்பாக விபரம் தெரிந்தால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கோ வைத்தியசாலை நிர்வாகத்துக்கோ தெரிவிக்குமாறு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்ட வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த செய்தி குறிப்பில், யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் மதியம் பார்வையாளர் நேரத்தில் நூதனமான முறையிலே திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம்(19.6.2024) சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் சகஜமாக கதைத்து அவருடைய மோதிரம் சிறுதொகைப்பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற நபர் CCTV யில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் குறிப்பிட்ட நபர் சென்று சகஜமாக கதைத்து குறிப்பிட்ட நோயாளியை X Ray கதிர்ப் படம் எடுக்க போக வேண்டும் எனவும் நீங்கள் உணவருந்தி குளித்து விட்டு ஆயத்தமாக இருங்கள் என்று கூறி அவரை X Ray கதிர்ப்படம் எடுக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்று நோயாளி அணிந்திருந்த மோதிரம், சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற சம்பவம் நடைபெற்றது.

குறிப்பிட்ட நபர் CCTV மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்திற்கோ தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.