கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய போர் கப்பல் கப்பல்
இலங்கையில் கடலோர காவல்படை கப்பலான சுரக்சாவுக்கான(Suraksha) உதிரி பாகங்களை வழங்குவதற்காக இந்திய கடலோர காவல்படை கப்பல் சாசெட்(Sachet) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தநிலையில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள, கப்பல் உதிரி பாகங்கள் இந்திய அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உதிரிப்பாகங்கள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன இது தொடர்பான நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், இலங்கை கடற்படைத் தளபதி மற்றும் இரு நாடுகளினதும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
🇮🇳 @IndiaCoastGuard Ship Sachet arrived in Colombo for handing over of spare parts worth USD 1.2 mn on grant for 🇱🇰 @SLCoastGuard Ship Suraksha. High Commissioner @santjha and 🇱🇰 Defence Secretary, Commander of 🇱🇰 Navy, senior officers graced the handing over ceremony. pic.twitter.com/mw2ACDiVg3
— India in Sri Lanka (@IndiainSL) June 21, 2024
இலங்கை கடலோரக் காவல்படை
இலங்கை கடலோரக் காவல்படையின் சுரக்சா, இந்தியாவினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட கப்பலாகும்.
இந்திய கடலோர காவல்படையின் ஒரு பகுதியாக இருந்தபோது இந்த கப்பல் வருணா என்று அழைக்கப்பட்டது.
கப்பல் 1,160 தொன் நிறையைக்கொண்ட இந்த கப்பல், 74.10 மீட்டர் நீளம் மற்றும் 11.4 மீட்டர் அகலம் கொண்டது.
இது மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் பயணிக்கும். இந்த கப்பலில் 14 அதிகாரிகள் மற்றும் 86 பணியாளர்கள்; பணியாற்றுகின்றனர்.