கிளிநொச்சியில் நெல்லை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை
கிளிநொச்சி (Kilinochchi) குடமுருட்டி குளத்தின் கீழான சிறுபோக செய்கையின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி திணைக்களத்தின் கீழ் உள்ள குடமுருட்டி குளத்தின் கீழ் இந்த ஆண்டு 330 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, குறித்த குளத்தின் கீழான பயிர்செய்கையானது குளத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக பெப்ரவரி மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதால் காலநிலை மற்றும் நோய்த் தாக்கம் என்பவற்றால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை.
விவசாயிகள் கவலை
மேலும், அறுவடை செய்கின்ற நெல்லை சரியான விலைக்கு சந்தைப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.