இந்த பழத்தை இப்படி மட்டும் சாப்பிட்டு பாருங்க – சுகர் சர்ருன்னு குறையும்!
நாவல் பழம் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது.
நாவல் பழம்
நாவல் பழத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது. நாவல் பழம் தவிர, நாவல் மரத்தின் பட்டை, இலைகளிலும் மருத்துவ குணம் உள்ளதால் இதையும் கூட பயன்படுத்தலாம்.
இந்த பழம் கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளது. நாவல் பழத்தின் சதையை அப்படியே சாப்பிடுவதற்கு பதில் அதனை காய வைத்து பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
நன்மைகள்
நாவல் பழத்தை அதன் இலைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சர்க்கரை அளவை குறைக்கலாம். நாவல் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் அதிகம் நிறைந்து காணப்படுவதால் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள்,
வயிற்றுப்போக்கு மற்றும் ஆஸ்துமா உள்ளிட்டவற்றுக்கும் இந்த பழம் நிவாரணம் அளிக்கும். இது தவிர இந்த மரத்தின் இலைகளைப் பயன்படுத்துவது பற்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.