சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் நோய்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா (Channa de Silva) தெரிவித்துள்ளார்.
பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாக பரவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு
இந்த நோய்கள் மிக இலகுவாகப் பரவும் என்பதால், சிறு குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் வயிற்றுப்போக்கு அதிகரித்துள்ளதாகவும், வைரஸ் காய்ச்சலுக்குப் பின்னரே குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்படுவதாகவும் வைத்தியர் சன்ன டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு (Sri Lanka) அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா (India) போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.