;
Athirady Tamil News

இலங்கையில் தங்கியுள்ள அகதிகள் மத்தியில் பதற்றம்

0

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் (UN) உயர்ஸ்தானிகரகம், இலங்கையில் (Sri Lanka) அதன் நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைக்க முடிவு செய்துள்ளமை தொடர்பில், சுமார் 500 அகதிகள் பதற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அகதிகள் தினம் ஜூன் 20 அன்று நினைவு கூரப்பட்ட நிலையில் இந்த தகவலும் வெளியாகியுள்ளது.

1951 ஐக்கிய நாடுகளின அகதிகள் மாநாட்டில் இலங்கை கையெழுத்திடவில்லை, இதன்படி இலங்கைக்கு வரும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது.

ஐக்கிய நாடுகளின் அமைப்பு
இந்நிலையில் இறுதியில், அவர்கள் மூன்றாவது நாட்டில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.

இதனை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பே மேற்கொள்ளும்.

இலங்கையில் தற்போது பாகிஸ்தானின் சிறுபான்மை அஹ்மதியா பிரிவினர் மற்றும் மியான்மாரின் நாடற்ற ரோஹிங்கியா சமூகங்களைச் சேர்ந்த அகதிகள் தங்கியுள்ளனர்.

எனினும் அவர்கள் உரியமுறையில் பராமரிக்கப்படுவதில்லை என்று அந்த அகதிகளுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயற்பட்டு வரும் தேசிய கடற்றொழில் ஒற்றுமை இயக்கம் தெரிவித்துள்ளது.

பல குடும்பங்கள் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு வேளை உணவை மட்டுமே சாப்பிடுகின்றன.

எனினும், அது வெறும் ஆட்டா மாவைவே அவர்கள் உணவாக எடுத்துக்கொள்கின்றனர் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

சுகாதார திட்டங்கள்
சில அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் இருப்பதாகவும், அவர்கள் பெரும்பாலான பிள்ளைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இயக்கத்தின் பேச்சாளர் ரண்சி குணவர்தன தெரிவித்துள்ளார்.

அகதிகளின் சுமார் 70 குழந்தைகள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை. அத்துடன் அரச பாடசாலைகளில் சேர்க்காததால், தனியார் பாடசாலைகளுக்கே செல்ல வேண்டும்.

எனினும் கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

சுகாதார சேவைகளை பொறுத்தவரையில், இந்த அகதிகள் நீர்கொழும்பு மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறலாம். மருத்துவிச்சிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் அவர்களுக்காகவும் சுகாதார திட்டங்களை நடத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.