;
Athirady Tamil News

மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

0

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ், மனித கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொருவருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு மில்லியன் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு (Sri Lanka) மற்றும் இலங்கைக்கு வெளியே ஆட்களை கடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை இந்த சட்டம் பரிந்துரைக்கிறது.

சிறைத்தண்டனை
நிதி அல்லது பொருள் ஆதாயத்திற்காக, இலங்கையர் அல்லாதவர்களை இலங்கைக்கு கடத்துபவர்கள், சட்ட விரோதமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட எந்தவொருவரையும் தெரிந்தே அடைக்கலம் கொடுத்தல், மறைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடத்தப்படுவோரை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் ஐந்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் 1.5 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

எவ்வாறாயினும், குழந்தைகள் தொடர்பான குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், குற்றவாளிகளுக்கு எட்டு முதல் இருபது ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், இரண்டு மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.