Frexit நோக்கி பிரான்சை நகர்த்தும் இமானுவல் மேக்ரான்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாட்டை Frexit நோக்கி நகர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் செயல்பட்ட முன்னாள் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Frexit தொடர்பில்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை Brexit பேச்சுவார்த்தையாளராக செயல்பட்டவர் முன்னாள் பிரான்ஸ் அமைச்சரான Michel Barnier. இவரே தற்போது இமானுவல் மேக்ரானை Frexit தொடர்பில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புலம்பெயர் மக்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை இமானுவல் மேக்ரான் கண்டுகொள்ளவில்லை என்றே Michel Barnier குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டுமின்றி, Brexit-ல் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாத நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் என்றும் தமது நினைவுக் குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
Brexit பேச்சுவார்த்தையாளர் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர், தமது நினைவுக் குறிப்புகள் நூலை இமானுவல் மேக்ரானுக்கு வழங்கியதாகவும், ஆனால் 3 ஆண்டுகளுக்கு பின்னர கருத்து தெரிவித்துள்ள அவர், தமது எச்சரிக்கைகளை இமானுவல் மேக்ரான் கண்டுகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வலதுசாரிகள்
இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்திருப்பதே, பெரும் சவாலான ஒரு காலகட்டத்தில் என Michel Barnier குறிப்பிட்டுள்ளார். இது தீவிர வலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பாக அமையும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் ரிஷி சுனக் எதிர்கொள்ளவிருக்கும் பெரும் ஏமாற்றத்தைவிட பயங்கரமாக இருக்கும் இமானுவல் மேக்ரானின் நிலை என உள்ளூர் கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.