கள்ளச்சாராயத்தால் சுடுகாடாக காட்சியளிக்கும் கருணாபுரம்., வேதனையில் மக்கள்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 20 மேற்பட்டோர் உயிரிழந்த கிராம் கருணாபுரம்.
பெரும் சோகத்தில் மூழ்கியுள்ள கருணாபுரம் மக்கள், இப்பகுதியில் பல ஆண்டுகாலமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாகவும், இன்று வரை தொடர்வதாகவும் கூறியுள்ளனர்.
இங்கு கள்ளச்சாராயம் விறக்கப்படுவது அப்பகுதி கவுன்சிலர், அரசியல் தலைவர்கள், பொலிஸ் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனால், அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், புகார் கொடுத்தும், கள்ளச்சாராயம் விரப்பவர்களை நேரடியாக எதிர்த்து கேள்வி கேட்டும் எந்த பயனும் இல்லை.
கள்ளச்சாராயம் விற்பவர்களிடமிருந்து அப்பகுதியில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கு லஞ்சம் செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிராமமே துக்கத்தில் இருப்பதாகவும், ஒருவர் வீட்டில் சோகம் என்றால் அக்கம் பக்கத்தினர் ஆறுதலுக்கு வறுய்வார்கள், இப்போது சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மரணங்களும் பாதிக்கப்பட்டவர்களுமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்ததோடு கள்ளச்சாராயம் ஒழிக்கப்படவேண்டும், இனி இப்படி யாருக்கும் நடக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.