யாழ்.இளைஞனை வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 60 இலட்சம் மோசடி செய்த நபர் கைது
சர்வதேச மனித உரிமைகள் காப்பகத்தில் வேலை செய்வதாக தன்னை அறிமுகம் செய்த நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனித உரிமை காப்பகத்தின் ஊடாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடியும் என இளைஞனிடம் கூறி , 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
பணத்தினை பெற்றுக்கொண்டவர் , நீண்ட காலமாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காததால் , இளைஞன் பணத்தினை மீள கோரிய போது , பணத்தினை மீள வழங்காததால் ,பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளில் , குறித்த நபர் மனித உரிமைகள் காப்பகத்தில் வேலை செய்வதாகவும் , கொழும்பில் வசிப்பதாகவும் இளைஞனிடம் கூறியது பொய் எனவும் , கிழக்கு மாகாணத்தை சொந்த இடமாக கொண்டு , கிழக்கு மாகாணத்திலையே வசித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வேறு நபர்களையும் இவ்வாறு ஏமாற்றியுள்ளாரா ? என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்