கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவசர எச்சரிக்கை
இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, திருகோணமலையிலிருந்து (Trincomalee) காங்கேசன்துறை மற்றும் புத்தளம் (Puttalam) ஊடாக சிலாபம் (Chilaw) வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து (Hambantota) பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் கடலலை மேலெழக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இந்த காலப்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிலாபத்திலிருந்து கொழும்பு (Colombo) மற்றும் காலி (Galle) ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.