இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2024 ஆம் ஆண்டில் இதுவரை 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
குறித்த அதிகார சபைத் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், ஜனவரியில் 208,253 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 218,350 பேரும், மார்ச் மாதத்தில் 209,181 பேரும், ஏப்ரலில் 148,867 பேரும், மே மாதத்தில் 112,128 பேரும், ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை 69,825 பேரும் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
இந்நிலையில், ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, போலந்து மற்றும் மாலைதீவுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை வந்துள்ளனர்.