கனேடிய தேவாலயமொன்றில் காணப்படும் அபாயம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு
கனடாவின் (Canada) ஹாலிபெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்றை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணிகளுக்காக இவ்வாறு தேவாலயத்தை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஹாலிபெக்ஸின் பிரவுன் ஸ்பீக் வீதியில் புனித பத்திரிசியார் தேவாலய கட்டிடம் அமைந்துள்ளது.
வழிபாடுகளை நடத்துவது ரத்து
இந்த தேவாலயத்தில் காணப்படும் கோபுரம் இடிந்து விழக்கூடிய அபாயத்தை எதிர் நோக்கி உள்ளது.
இதன் காரணமாக குறித்த தேவாலயத்தில் பூஜை வழிபாடுகளை நடத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்கள் இந்த தேவாலயத்திற்குள் பிரவேசிப்பதனை தடுப்பதற்கு மதில் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்த தேவாலயத்தின் முக்கியமான பொருட்கள், சிலைகள் உள்ளிட்டன பாதுகாப்பாக வேறு ஒரு இடத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தேவாலய கட்டிடம் இடிக்கப்பட்டு புணரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.