ரஷ்யாவில் பயங்கரம்: ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி
ரஷ்யாவின் காக்கசஸ் மாகாணம் மக்கஞ்கலா, டர்பெண்ட் ஆகிய நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்கள் மீது ஆயுததாரிகள் நேற்று ()23)இரவு நடத்திய தாக்குதலில் பாதிரியார் மற்றும் காவல்துறையினர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவ மற்றும் யூத மதவழிபாட்டு தலங்களை குறிவைத்து ஆயுததாரிகள் தாக்குதலை முன்னெடுத்தனர். மதவழிபாட்டு தலங்களுக்குள் புகுந்த அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், மதபோதகரை கழுத்தறுத்து கொலை செய்தனர். பின்னர், மதவழிபாட்டு தலங்களை தீவைத்து கொளுத்தினர்.
காவல்துறை சோதனை சாவடி மீதும் தாக்குதல்
அதேபோல், டர்பெண்ட் நகரில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடியை குறிவைத்தும் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல்களில்15 காவல்துறையினர் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலை மேற்கொண்ட ஆயுததாரிகள் மீது நடத்தப்பட்ட பதில் தாக்குதல்களில் ஆறுபேர் கொல்லப்பட்டதாக தாகெஸ்தான் குடியரசின் தலைவரான செர்ஜி மெலிகோவ்,தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல்
இந்த பயங்கரவாத தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி நடந்த அரங்கில் புகுந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.