ஆப்கானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் வீடுகளில்
ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் மண் வீடுகளில் வசிக்கின்றனர்.
அவை மழை, பனிப்பொழிவு மற்றும் பூகம்பங்கள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் பாதிக்கக்கூடியவை ஆகும்.
இந்த நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாக்டியா (Paktia) மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
7 பேர் பலி
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் Jakaorgor எனும் கிராமத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிலர் சிக்கியுள்ளனர்.
பல வீடுகள் இடிந்து தரைமட்டமானத்தில் குறைந்தது 7 பேர் பலியானதாக Xinhua எனும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் Jakaorgorயில் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.