உண்மையை மறைத்த நாசா? விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ்
போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து இரண்டு விண்வெளி வீரர்களை விண்கலம் ஒன்றில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ள நிலையில், அந்த விண்கலத்தில் வாயுக் கசிவு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளிக்கு பயணிகளை அனுப்பும் சோதனை முயற்சியாக, போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து, இரண்டு விண்வெளி வீரர்களை Starliner என்னும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளன. அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ்.
சுனிதாவும் அவரது சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 13ஆம் திகதி பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டும்.
ஆனால், அவர்கள் இதுவரை பூமிக்குத் திரும்பவில்லை. அதாவது, அவர்கள் இருவரும் 10 நாட்களாக விண்வெளி நிலையத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
என்ன பிரச்சினை?
சுனிதாவும் வில்மோரும் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு இருப்பது தெரியவந்துள்ளதாலேயே அவர்கள் பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், இந்த கசிவு குறித்த உண்மை நாசாவுக்கும் போயிங் நிறுவனத்துக்கும் ஏற்கனவே தெரியுமாம்.
இப்போது, சிறிய பிரச்சினை என கருதப்பட்ட அந்த பிரச்சினையால் விண்வெளி வீரர்கள் இருவரும் விண்வெளி நிலையத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள் என்கின்றன ஊடகங்கள்.